/* */

ராஜ்கிரண் நடிப்பில் கபடியை மையமாக வைத்து உருவான 'பட்டத்து அரசன்'

'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், இந்த படம் உருவான விதம் குறித்த தகவல் உங்களுக்காக

HIGHLIGHTS

ராஜ்கிரண் நடிப்பில் கபடியை மையமாக வைத்து உருவான  பட்டத்து அரசன்
X

பட்டத்து அரசன் படத்தில் ஒரு காட்சி

லைக்கா ப்ரொடக்சன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பட்டத்து அரசன். களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தின் அடுத்த படைப்பாக இந்த ''பட்டத்து அரசன்'' திரைப்படம் உருவாகியுள்ளது


ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. தஞ்சை மாவட்டம் ஆம்லாப்பட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, அப்பா, பேரன், மாமன், மச்சான், என ஒரு குடும்பமே கபடி விளையாடுவது பற்றிய கருவை அடிப்படையாக வைத்து இயக்குனரின் கற்பனை கதையை சேர்த்து திரைக்கதை உருவானது.

அதேபோல் தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி. அவரைப் பற்றி அந்த பகுதியில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த பெயரை இந்த பட்டத்து அரசன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்துள்னர், இதுகுறித்து ராஜ்கிரனிடம் கூறிய போது மகிழ்ச்சி அடைந்த அவர் அதேபோல் மற்ற வீரர்களின் பெயர்களும் தமிழகத்தில் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை வைக்குமாறு கூறியுள்ளார். அப்படி வைத்தால் அது அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என நினைத்து எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி விளையாட்டு வீரர்களின் பெயரையே சூட்டப்பட்டுள்ளது.

இதன் கதைக்களம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெற்றிலை தோட்டம் வைத்துள்ள குடும்பம் தான் ராஜ்கிரனின் குடும்பம். தார பங்கு என்ற விளக்கத்தின் அடிப்படையில் ராஜ்கிரனின் இரண்டு மனைவிகளுக்கும் தனது சொத்தை சமமாக பிரித்துக் இதனால் முதல் தாரத்தின் மகனுக்கும் இரண்டாம் தாரத்தின் மகனுக்கும் விரோதம் ஏற்படுகிறது இதன் காரணமாக ஊர் பிரச்சனை ஏற்பட்டு ஒரு குடும்பம் ஊரை எதிர்த்து கபடி விளையாடும் விதைக்கு தள்ளப்படுகிறது இதுதான் அந்த படத்தின் மைய கரு.

இதில் கபடி விளையாட்டு என்பது குடும்ப சண்டைகளுக்கிடையே ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. படம் முழுவதுமே கபடி விளையாட்டாக இல்லாமல், காதல், சென்டிமென்ட், அதிரடி என அனைத்தும் சேர்ந்து ஒரு கமர்சியல் படமாக உருவாகியுள்ளது.

ராஜ்கிரண், அதர்வா கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளது. அவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக அமையும். மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் ஆஷிகா ரங்கநாத் முதல் முறையாக தமிழில் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. சிறப்பான இசையை தர வேண்டும் என்ற காரணத்தினால் படப்பிபிப்பு முடிந்த பிறகு ஜிப்ரான் இசை கோர்ப்பு பணிகளை மேற்கொண்டார். பின்னணி இசை படத்தை வேற லெவலில் கொண்டு சேர்க்கும் என கூறப்படுகிறது. அதேபோல் வெற்றிலை தோட்டம் என்பது இதுவரை சினிமாவில் அவ்வளவாக காட்டப்படாத பேக்ட்ராப். அதை அழகாக தனது கேமராவில் லோகநாதன் படம் பிடித்துள்ளார்.

பட்டத்து அரசன் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Updated On: 19 Nov 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு