சீரியலில் விஜய் அப்பா... அதுவும் இந்த படத்தோட ரீமேக்காம்!

ராதிகாவின் ராடன் நிறுவனம் தற்போது புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. அது விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தின் ரீமேக்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் விசு நடித்த கதாபாத்திரத்தில் எஸ் ஏ சந்திர சேகர் நடிக்க இருக்கிறாராம்.
பல வெற்றிகளைக் குவித்த ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கை சீரியலாக எடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம். அதில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம் எஸ் ஏ சந்திரசேகர். சாட்ஜாத் நம்ம விஜய் அவர்களோட தந்தைதான்.
எஸ் ஏ சந்திரசேகரை இப்போது பலருக்கும் தளபதி விஜய்யின் தந்தையாகத் தான் தெரியும். ஆனால் அவர் மிகப் பிரபலமான இயக்குநர். அவரது இயக்கத்தில் பல படங்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்துள்ளன.
சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், செந்தூரப் பாண்டி உள்ளிட்ட பல படங்கள் இயக்கியுள்ளார். விஜய்யை நடிகராக்கி நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும் இவரது மகன் விஜய்க்கும் சின்ன மன்ஸ்தாபம் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் இவர்கள் முன்பு மாதிரி பேசுவதில்லை எனவும் கூறுகிறார்கள்.
படங்களை இயக்குவதிலிருந்து ஓய்வு பெற்ற சந்திரசேகர், பின் நடிக்கலாம் என முயற்சி செய்தார். கொடி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் பின் அதையும் விட்டுவிட்டார். இந்நிலையில், தற்போது சீரியல் பக்கம் தலைகாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் சன்டிவியில் பல தொடர்களை தயாரித்து வெளியிட்டு வந்துள்ளது. பல தொடர்கள் வெற்றி பெற்றன. ராதிகாவே சில தொடர்களில் நாயகியாக நடித்திருப்பார். ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சன்டிவியுடன் சண்டையிட்டு வெளியேறினர்.
ராதிகாவின் ராடன் நிறுவனம் தற்போது புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. அது விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தின் ரீமேக்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் விசு நடித்த கதாபாத்திரத்தில் எஸ் ஏ சந்திர சேகர் நடிக்க இருக்கிறாராம்.
இந்த சீரியலுக்கு கிழக்கு வாசல் என்று பெயரிட்டிருக்கிறார்களாம். விசு இந்த படத்தில் நடித்த கதாபாத்திர வடிவமைப்பை அப்படியே சீரியலுக்கு ஏற்றவாறு மாற்றுகிறார்கள். வழக்கமாக சீரியலில் பெண்களே டாமினேட் செய்வார்கள் என்பது மாறி இப்போது ஆண்கள் முதன்மை வேடத்தில் நடிக்கும் சீரியல்களும் வரத் துவங்கிவிட்டன.
இது ஒரு புறம் இருக்க, அங்கே மகன் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார் இங்கே அப்பா டிவி சீரியலில் நடித்துதான் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமா என எதிர் கேள்விகள் எழும்பாமல் இல்லை. விஜய் இன்றைய தேதிக்கு படத்துக்கு ௧௨௦ நூற்றி இருபது கோடிகள் சராசரியாக வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்பாவுக்கு கொடுக்க மாட்டாரா என கேட்க, பதிலுக்கு எப்போதும் மகன் தருவதை எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் எந்த அப்பாவுக்கும் இல்லை. தனது திருப்திக்காகவும் அவர் நடிக்கலாம் அல்லவா என்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu