வரவேற்பை பெற்ற மார்க் ஆண்டனி! விஷாலுக்கு முதல் 100 கோடி படம்..!

வரவேற்பை பெற்ற மார்க் ஆண்டனி! விஷாலுக்கு முதல் 100 கோடி படம்..!
X
விஷாலுக்கு முதல் 100 கோடி படம் பார்சல்... உற்சாகத்தில் ரசிகர்கள்..!

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. தியேட்டரில் தொடர்ந்து இந்தப்படத்திற்கு ஆடியன்ஸ்கள் வைப் செய்து வருகின்றனர். விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று தெரிகிறது.

விஷாலுக்கு தரமான் கம்பேக்

நடிகர் விஷாலுக்கும் இந்தப்படம் தரமான் கம்பேக்காக அமைந்துள்ளது. தொடர்ச்சியாக அவர் நடித்து வந்த படங்கள் அனைத்தும் தோல்விகளை தழுவி வந்த நிலையில் மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இதனால் நடிகர் விஷாலும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

நடிகர் விஷாலின் நன்றி

படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் ஆதரவாலும், கடவுளின் ஆசிர்வாதத்தாலும் மார்க் ஆண்டனி படம் வெற்றியை பெற்று வருகிறது. அனைவரும் இந்தப்படம் பிளாக் பஸ்டர் என சொல்லி கேட்கும் போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

மேலும் இந்தப்படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரின் டிக்கெட் விலையில் இருந்தும் ஒரு ரூபாய் சேகரித்து மக்கள் சார்பாக விவசாயிகளுக்கு கொடுக்க போகிறேன் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஷால். அவரின் இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

படத்தின் வசூல் அதிகரிப்பு

மார்க் ஆண்டனி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் படத்தின் கலெக்சன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை வந்ததை போலவே விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான திங்கட்கிழமையும் மக்கள் மார்க் ஆண்டனி திரையிட்ட தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், 4 நாட்களில் 50 கோடி வசூல் வேட்டையை விஷால் படம் நடத்தியுள்ளது என்கின்றனர். செப்டம்பர் 19ம் தேதி முடிவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இந்த படம், அடுத்தடுத்த வாரங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போதும் சில திரையரங்குகளில் ஓடி வரும் இந்த படம் இதுவரை 92 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருக்கிறதாம். இன்னும் சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத்தொட்டு விடும் என படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரனின் தரமான கம்பேக்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா படங்களில் சொதப்பிய ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். டைம் டிராவல், சில்க் ஸ்மிதா என சில டக்கரான ஐடியாக்களை வைத்து மார்க் ஆண்டனி படத்தை சிறப்பாகவே இயக்கி விட்டார் ஆதிக். இதன் காரணமாகவே படத்திற்கு ரசிகர்கள் இடையே எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவின் அசத்தல்

அத்துடன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.ஏற்கனவே நடிப்பு அரக்கன் என பெயர் வாங்கிய எஸ்.ஜே. சூர்யா மார்க் ஆண்டனி படம் மூலம் அதனை திரும்பவும் நிரூபித்துள்ளார். மேலும் இந்தப்படம் மூலமாக விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் தரமான கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் வெற்றிக்கான காரணங்கள்

  • மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்றதற்கு பின் பின்வரும் காரணங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன:
  • டைம் டிராவல் என்ற புதிய கருத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது
  • விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் அசத்தல் நடிப்பு
  • ஆதிக் ரவிச்சந்திரனின் சிறப்பான இயக்கம்
  • பாசிட்டிவ் விமர்சனங்கள்

Tags

Next Story