/* */

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் நடிகர் கார்த்திக்

ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் நடிகர் கார்த்திக்
X

நடிகர் கார்த்திக்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமான நிலையில், படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளித்த காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக உறுதிபடுத்தினார்.

லஞ்சம், ஊழலை எதிர்த்து பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஷங்கரின் இந்தியன் படம், ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது. அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் கமல் நடித்திருந்தார். அடுத்து வர உள்ள இந்தியன் 2 படத்தை காணவும், ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட இப்படம், கிரேன் விபத்து உள்ளிட்ட சில காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்காமல் நின்று போனது.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்தியன் 2 படத்தில் நவரச நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1980 - 1990 களில் பல வெற்றி படங்களில் நடித்த கார்த்திக், தற்போதும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் படத்தில், உலக நாயகன் கமலுடன் நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிப்பது அவரது ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளது.

Updated On: 9 Aug 2022 11:59 PM GMT

Related News