வேலூர் நகைக்கடை கொள்ளையில் தொடர் புலன் விசாரணை: வேலூர் சரக டிஐஜி
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் தொடர் புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி பாபு கூறியுள்ளார்
வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் குற்றவாளியா இல்லை பலபேர் சம்மந்தப்பட்டு உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு கூறினார்
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்
மேலும் அரக்கோணம் அடுத்த நெமிலியில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடித்தவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பற்றிய சில துப்புகள் கிடைத்துள்ளதால் விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உடன் இருந்தார்