வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர்;

Update: 2023-10-28 07:55 GMT

வேலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி களில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 639 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 48 ஆயிரத்து 515 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 162 பேர் என மொத்தம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 1303 வாக்குச்சாவடிகள் 656 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வேலூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகங்கள், மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இன்று முதல் வருகிற 9, 12, 23-ம் தேதி வரை படிவம் 6, 6 பி, 7,8, ஆகியவற்றில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

பொதுமக்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்,ய திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வழங்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும் 18 மற்றும் 19 ஆகிய’ தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர்கள் உடனடியாக படிவம் 6 பி- ல் ஆதார் விவரத்தினை பதிவு செய்து வழங்கலாம்.

இந்த சுருக்க திருத்த பணிகள் முடிந்தவுடன் ஜனவரி மாதம் 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்ட மன்ற தொகுதியின் எண் மற்றும் பெயர் வருமாறு:-

காட்பாடி: ஆண்-1,16,383, பெண்-1,24,750, மூன்றாம் பாலினம்-34, மொத்தம்-2,41,167

வேலூர்: ஆண்-1,17,441, பெண்-1,26,691, மூன்றாம் பாலினம்-44, மொத்தம்-2,44,176

அணைக்கட்டு: ஆண்-1,22,842, பெண்-1,30,334, மூன்றாம் பாலினம்-33, மொத்தம்-2,44,176

கே.வி.குப்பம் (தனி): ஆண்-1,11,478, பெண்-1,16,402, மூன்றாம் பாலினம்-8, மொத்தம்-2,27,888

குடியாத்தம் (தனி): ஆண்-1,40,495, பெண்-1,50,338, மூன்றாம் பாலினம்-43, மொத்தம்-2,90,876

மொத்த ஆண்கள்-6,08,639, பெண்கள்-6,48,515, மூன்றாம் பாலினம்-162, மொத்தம்-12,57,316

Tags:    

Similar News