திருவண்ணாமலை ரயில்வே நிலையம் மறுசீரமைப்பு!

திருவண்ணாமலை ரயில்வே நிலையம் மறுசீரமைப்பு,காணொளி காட்சி மூலம் பிரதமர் திறந்து வைத்தார்

Update: 2024-02-27 01:56 GMT

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் மற்றும் ஆட்சியர்

திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூபாய் 8 கோடியில் மறுசீரமைப்புக்கான பணியினை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை ரயில்வே நிலையம் அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டத்திற்கு ரூபாய் 8 கோடியே 27 லட்சம் மதிப்பில் முன் பகுதி முகப்பு மின்விளக்கு, குடிநீர் வசதி ,நடைமேடை, மேற்கூரை, பயணிகள் ஓய்வு வரை போன்ற மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு அதற்கான கல்வெட்டு பலகையினை திறந்து வைத்தார்.  முன்னதாக பல்வேறு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் கிரி, தென்னக ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், திருவண்ணாமலை ரயில் நிலைய அலுவலர் சுப்பிரமணி, நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருவண்ணாமலை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட கிரிட்டிக்கல் கேர் பிளாக்கிற்கு பாரத பிரதமர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டும் நிகழ்வை தொடங்கி வைத்ததை தொடர்ந்து சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கல்வெட்டினை திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ,நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில கடக ல சங்கத் துணைத் தலைவர் கம்பன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிகரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News