கொரோனா எதிரொலி: தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து

தொற்று பரவலால், தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து செய்யப்படுவதாக, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-01-12 07:34 GMT

கோப்பு படம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில்,  ஆண்டு தோறும் தை ஐந்தாம் நாள்,  ஆற்றுத் திருவிழா நடைபெறும். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையார் தென்பெண்ணையாற்றில் எழுந்தருளுவார்; அங்கு தீர்த்தவாரி நடைபெறும் . ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

இந்த ஆண்டு ஆற்றுத் திருவிழா, வரும் 18ம் தேதி வருகிறது. கொரோனா காரணமாக, அண்ணாமலையார் தீர்த்தவாரி திருவிழா குறித்து விழாக்குழுவினர், இந்து சமய அறநிலைத்துறை, காவல் துறையினர் பங்கேற்ற கூட்டம் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் குமரன், டி.எஸ்.பி., கங்காதரன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கண்காணிப்பாளர், திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அருள் பங்கேற்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.

அரசின் விதி முறையை பின்பற்றும் வகையில், அண்ணாமலையார் தீர்த்தவாரி வைபவத்தை நடத்த வாய்ப்பு இல்லை என விழாவை நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக,  வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின், பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று கோவில் வளாகத்திலேயே தீர்த்தவாரி நடத்த முடிவு செய்திருப்பதாக திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News