கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற எஸ்பி அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்கும் போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற திருவண்ணாமலை எஸ்பி அறிவுறுத்தினார்

Update: 2021-09-09 13:04 GMT

திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் ரெட்டி 

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவி வழிபாடு, நடத்த கூடாது. பொதுமக்கள் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தலாம்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஒன்றுகூடி ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கும் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 11 துணைக் காவல் கண்காணிப்பாளர் உட்பட 1115 காவல்துறையினர் மற்றும் 250 ஊர் காவல் படையினர் என மொத்தமாக 1365 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News