அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி: அமைச்சர் பேச்சு

அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வேலு கூறினார்.

Update: 2024-06-18 02:24 GMT

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு

பாஜக வளர்ந்தால் தமிழ்நாட்டில் புல் , பூண்டுக்கூட முளைக்காது என விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வடக்கு ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வடக்கு ஒன்றிய இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுகம் மற்றும் இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஒரு தொண்டனை வேட்பாளராக அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின், அன்னியூர் சிவா வெற்றி பெற்றால் ஒரு தொண்டன் வெற்றி பெற்றதாக அர்த்தம். திமுகவுக்கு திண்ணை பிரச்சாரம் தான் கை கொடுத்தது. அதிமுக இங்கே போட்டியிடவில்லை, அதிமுக நமக்கு எதிரியல்ல. ஆனால் பாஜக கூட்டணி தான் எதிரி. பாஜக வளர்ந்தால் தமிழ்நாட்டில் புல் , பூண்டுக்கூட முளைக்காது. பாஜக கூட்டணி வைத்துள்ள கட்சியை தோற்கடிக்க வேண்டும். ஆ ன் மீ க த்தை யு ம் , திராவிடத்தையும் பிரிக்க முடியாது. இன்னும் ஐந்து முறை தான் திமுக ஆளும், அடுத்தது அதிமுக ஆண்டுவிட்டு போகட்டும், ஆனால் பாஜகவை உள்ளே விடமாட்டோம். வன்னியர மக்களுக்கு சொல்கிறேன். கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து கழகம், ஆசிரியர் பணி உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளிலும் 37 சதவீதத்தை தாண்டி வன்னியர்கள் அனுபவித்து வருகிறார்கள். இவற்றை 10.5 சதவீதமாக சுருக்கிக்கொள்ளப்போகிறமா என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பொன்முடி

நமக்கு பயந்து அதிமுகவினர் போட்டியிடவில்லைஎன்ற அர்த்தம் கிடையாது. அதிமுகவினர் நமக்கு தான் வாக்களிப்பர், ஏனென்றால் இது திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதிப் பற்றி டாக்டர் ராமதாஸ் பேசுகிறார் சமூக நீதி பற்றி பேசுவதற்கு திராவிட மாடல் பெரியார் வழியில் வந்தவர்களை தவிர வேறு யாருக்காவது தகுதி இருக்கிறதா, பிஜேபியுடன் கூட்டணி வைத்தவர்கள் சமூகநீதியைபற்றி பேசலாமா சமூக நீதி பற்றி அவர்கள் மோடியிடம் தான் பேச வேண்டும், அதை விடுத்து விட்டு இங்கேபேசுகிறார்கள் என அமைச்சர் பொன்முடி பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி,மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News