எண்ணெயில் இருந்து பயோ டீசல் தயாரிப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் எண்ணெயில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2021-07-29 13:08 GMT

எண்ணெயில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் எண்ணெயில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

RUCO (Repurpose used cooking oil) சமையலுக்கு உபயோகப் படுத்திய எண்ணெயை மீண்டும் வறுக்கும்போது, மனித நுகர்வுக்கு பாதுகாப்பற்றதாக மாறி விடுகிறது. இதனால் பல்வேறு உடல் பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது குறிப்பாக  புற்றுநோய்,  இதய பாதிப்பு, கல்லீரல் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட முக்கியக் காரணமாகி விடுகிறது.

இதை தவிர்க்கும் பொருட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை fassi மற்றும் பெட்ரோலியத் துறை இணைந்து பயோ-டீசல் ஆக மாற்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக தனலட்சுமி கெமிக்கல் இன்டஸ்ட்ரி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், உணவு விடுதி அதிபர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News