திருவண்ணாமலையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Doctors Association - பணி நேரத்தை நீட்டிக்கும் அரசாணையை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-09 07:28 GMT

அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Doctors Association - தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கான பணி நேரம் பல வருடங்களாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என இருந்தது. இதனை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று மாற்ற அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் கருத்துரு சமர்ப்பித்தது.

இந்த அரசாணை கடந்த 25-ந் தேதியன்று வெளியிடப்பட்டது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் சுரேஷ், பாலசந்தர், சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் வெங்கடேஷ் வரவேற்றார்.

இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரத்தை நீட்டிக்கும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News