நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மட்டும் 11-ந் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

Update: 2021-10-01 05:40 GMT

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இதனையடுத்து நெல்வரத்து குறைவு காரணமாக 25 நேரடி கொள்முதல் நிலையங்களில் 19 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படாது. தச்சூர், நல்லூர், நெடுங்குணம், பாராசூர், தவசிமேடு மற்றும் பெருங்கட்டூர் ஆகிய 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் வருகிற 11-ம்  தேதி (திங்கட்கிழமை) வரை செயல்படும். விவசாயிகள் தற்போது நடைமுறையில் உள்ள பதிவு முறைகளை பின்பற்றி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் முறை மூலமாக மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு ஆட்சியர்  முருகேஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News