வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-24 02:10 GMT

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

வருகிற மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பேரணி நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை-வேலூா் சாலை, பச்சையம்மன் கோவில் தெரு, பெரியாா் நகா் பகுதியில் இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு வீடு, வீடாகச் சென்று தேர்தல் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டியதுடன், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தாா். தொடா்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் வழங்கப்படும் சத்துமாவுடன் கூடிய புட்டிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட வில்லைகளை ஒட்டியதுடன், அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினாா் ஆட்சியா்.

விழிப்புணா்வு வாகனப் பேரணி

தொடா்ந்து, 300- க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு வாகனப் பேரணியை ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்தாா். தேர்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கடந்த தேர்தலில் வாக்குச் சதவீதம் குறைந்த பகுதிகளில் பேரணியாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தொடா்ந்து, வாக்காளா் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலா் மீனாம்பிகை, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சரண்யா, ரேவதி, ஏஞ்சலின் சிந்தியா ராணி மற்றும் மேற்பாா்வையாளா்கள், போஷான் அபியான் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

Tags:    

Similar News