திருவண்ணாமலையில் முழு ஊரடங்கினால் அனைத்து கடைகளும் அடைப்பு

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கினால் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2022-01-16 07:00 GMT

கிரிவலப்பாதை முழுவதும் தடுப்புகள் அமைத்து போலீசார்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில் நேற்று இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இன்று ஞாயிறு முழு ஊரடங்கு தினம் என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கிச்சென்றனர். இதனால் மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்டவைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று மீன் கடைகள் இரவு 10 மணிவரை செயல்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நாளையும் கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலப்பாதை முழுவதும் தடுப்புகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News