காலையில் திறந்து மாலையில் மூடப்பட்ட பூங்கா

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவின்படி மாலையில் அனைத்து பூங்காக்களும் மூடி சீல் வைக்கப்பட்டன

Update: 2021-08-25 05:15 GMT

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

கடந்த 15 நாட்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவுப்படி சாத்தனூர் அணை உட்பட மாவட்டத்திலுள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். திங்கட்கிழமை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததால் அன்று யாரும் அனுமதிக்கப்படவில்லை . நேற்றுமுதல் அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் உள்ளிட்டவை நேற்று முதல் 29.08.2021 வரை ஒரு வார காலத்திற்கு மூட உத்தரவிட்டார்.

சாத்தனூர் அணை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவால் மாலையில் அனைத்து பூங்காக்களும் மூடி சீல் வைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

Tags:    

Similar News