திருவண்ணாமலையில் 100% தபால் வாக்களிப்பதற்கான பணிகள்

80 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு விடாகச் சென்று தபால் வாக்கு வழங்குவதற்கு 110 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

Update: 2021-03-30 16:15 GMT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் செங்கம் பக்கிரிபாளையம் மற்றும் மாவட்ட எல்லையான ஆணைவாடி சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியில் இறுதி செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவிடும் பணிகள் நடைறெ;று வருகிறது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 80 வயதிற்கு மேல் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மொத்தம் 8531 நபர்கள் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 29ம் தேதி திங்கள்கிழமை முதல் வீடு, வீடாகச் சென்று தபால் வாக்கு வழங்குவதற்கு 110 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் 80 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்க நேற்று மட்டும் 703 நபர்கள் தபால் வாக்களித்து உள்ளார்கள், மேலும், இரண்டு நாட்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.


Tags:    

Similar News