வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2022-02-17 05:45 GMT

மாதிரி படம் 

10 மற்றும் 12 வகுப்புகளின் திருப்புதல் தேர்வுக்கான, 10 வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகின. இதுபற்றி அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் பொன் குமார், திருவண்ணாமலையில் நேரடியாக விசாரணை நடத்தினார்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 பள்ளிகள் வினாத்தாள்களை கசியவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி விளக்கம் கேட்டு அந்தப் பள்ளிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.

திருப்புதல் தேர்வு கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக போளூர் கல்வி மாவட்ட அதிகாரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் போளூர் அக்ஸிலியம் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், கணித ஆசிரியர், அலுவலகப் பணியாளர் மீது போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News