சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு

சேத்துப்பட்டு தாலுகாவில் புதிய மழைமானிகள் அமைக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-05-17 02:10 GMT

சேத்துப்பட்டில் ஆய்வு மேற்கொண்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் செம்பிய மங்கலம், அள்ளியமங்கலம் என பல்வேறு கிராமங்களில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் , ஒன்று முதல் 20 வயதுடைய குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஊட்டச்சத்து மாவு முட்டை என அரசு வழங்கும் உணவுப் பொருட்கள் சலுகைகள் அந்தந்த அங்கன்வாடி மையம் மூலம் முறையாக வழங்கப்படுகிறதா என குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி அங்குள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சேத்துப்பட்டு தாலுகாவில் புதிய மழைமானிகள் அமைக்க பாதுகாப்பு வேலிகள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் மூன்று புதிய மழைமானிகள் அமைக்க பாதுகாப்பு வேலி அமைத்திட அலகிடு செய்யும் பணியை தாசில்தார் பார்வையிட்டார்.

சேத்துப்பட்டு தாலுகாவில் மூன்று புதிய தானியங்கி மழை மாலி சேத்துப்பட்டு தாசில்தார் குடியிருப்பு, தேவிகாபுரம் பெரிய கொளப்பலூர், வருவாய் அலுவலர் குடியிருப்பு, பகுதியில் வருவாய்த்துறை சார்பில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலா, மண்டல துணை தாசில்தார் விஜய ராணி, துணை தாசில்தார்கள், தேர்தல் பிரிவு தாசில்தார்கள், நில அளவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ,அப்பகுதியினை ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News