மிக்ஜம் புயல் எதிரொலி; செய்யாறு கோட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.;
செய்யாறு கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த கலெக்டர் (கோப்பு படம்)
புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் இந்த மிக்ஜம் புயல் மேலும் தீவிரம் அடைகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகி உள்ளதால் மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னை அருகே வங்க கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம் காரணமாக. திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு நேற்று மழை பெய்தது.
மாவட்டத்தில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர புயல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
செய்யாறு கோட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வருவாய் கோட்டத்தை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.