குருவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் நாசர் வழங்கல்

தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2022-09-11 07:15 GMT

பெரியபாளையம் அருகே குருவாயல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர் வழங்கினார்..

பெரியபாளையம் அருகே குருவாயல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்குதமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் லோகநாதன், நாராயணமூர்த்தி, ஜானகிராமன், ராஜேஷ், ஜெகநாதன், சண்முகம், ஆகியோர் முன்னில வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர் பூந்தமல்லி எம்.எல். ஏ.ஆ.கிருஷ்ணசாமி, ஆகியோர் கலந்து கொண்டுஅரசின் விலை இல்லா மிதிவண்டிகளை பள்ளியில் பயிலும் 80. மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர்.

இதில்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் வி.ஜே. சீனிவாசன்,எம்.குமார், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் பி.ஜி. முனுசாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஜி.பாஸ்கர், டீ.பாஸ்கர், வழக்கறிஞர் கே.ஜி.அன்பு, ஈ. சுப்பிரமணி, உமா சீனிவாசன், செம்பேடு சுப்பிரமணி, ஆளவந்தான், ஸ்ரீதர், சேரா சேகர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட் அம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி வரவேற்றார். முடிவில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.




Tags:    

Similar News