திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

Pollachi Amman Temple - திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-08-08 02:49 GMT

Pollachi Amman Temple - திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில்  பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி அன்று மண்ணடியில் ஊர் கூடி கூழ் வார்த்தல் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த 5. ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிராமத்தைச் சேர்ந்த 200 பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 7.ம் தேதி அன்று காலை அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் குங்கும அர்ச்சனை இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அம்மனை அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.   இதனைத் தொடர்ந்து பூ கரகம் புறப்பாடு அழகுபானை நிற்க வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் 6 மணி அளவில் காப்பு கட்டி விரதம் இருந்த 200 பக்தர்கள் புனித நீராடிய இடத்திலிருந்து உற்சவர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் பின் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வைக்கப்பட்டனர். திருவிழாவை காண அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு10 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் ஊர் பெரியவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.திருவ


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News