ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம். எல்.ஏ. ஆறுதல்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம். எல்.ஏ. துரை சந்திரசேகர் ஆறுதல் கூறினார்.

Update: 2022-06-23 10:56 GMT

பொன்னேரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இழந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆறுதல் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடுரில் தனியார் இடத்தில் 5 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர்.அக்குடும்பத்தை அகற்ற கோரி நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் வீடுகள் அகற்றப்பட்டது.

இதனால் வீடுகளை இழந்த குடும்பத்தினர் மாற்று இடம் இல்லாததால் தங்குவதற்கு வழி இல்லாமல் குழந்தைகளுடன் கடந்த மூன்று நாட்களாக தெரு வீதியில் மழையிலும் வெயிலிலும் இரவு பகலாக 25பேர் தங்கியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் ஊராட்சி தலைவர் கஸ்தூரி மகேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டித் தருவதாக உறுதி கூறினர்.

Tags:    

Similar News