பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா

பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா, விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-04-29 05:01 GMT

பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடைபெற்றது.


நிகழ்ச்சியின் முன்னதாக சுவாமிகளுக்கு அதிகாலை பால்,தயிர், சந்தனம்,இளநீர்,மஞ்சள், குங்குமம், தேன், ஜவ்வாது, பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஹரிஹரன் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன்

கோவிந்தா, கோவிந்தா எனவும் ஓம் நமச்சிவாய என பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. இந்த சந்திப்பு திருவிழாவில் பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரியையும், ஹரனையும் ஒருசேர தரிசித்தனர். பிரம்மோற்சவத்தின் ஒரு நிகழ்வாக தேர்திருவிழா நாளை நடைபெற உள்ளது. வேறெங்கும் நடைபெறாத அபூர்வ நிகழ்வாக பொன்னேரியில் இந்த சந்திப்பு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Similar News