கும்மிடிப்பூண்டி அருகே பூர்ண சக்கரபந்தாசனத்தில் பள்ளி மாணவன் உலக சாதனை

கும்மிடிப்பூண்டி அருகே பூர்ண சக்கரபந்தாசனத்தில் பள்ளி மாணவன் உலக சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-02-08 07:06 GMT

பூர்ண சக்கர பந்தாசனத்தில் மாணவர் ஹரிஸ்.

கும்மிடிப்பூண்டியில் பள்ளி மாணவன் சேது பந்த பூர்ண சக்கரபந்தாசனத்தில் 1.30 நிமிடத்தில் 102 வேகமான சுழற்சிகளை செய்து நோவா வோல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த திப்பம் பாளையத்தை சேர்ந்த முரளி-வித்யா தம்பதியரின் மகன் எம். ஹரிஷ். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் இன்று மகாராஜா அக்ரசன் தனியார் பள்ளியில் நடைபெற்ற உலக சாதனை முயற்சியில் உடலை பின்புறமாக வளைத்து செய்யக்கூடிய மிகவும் கடினமான சேது பந்த பூர்ண சக்கரபந்தாசனத்தில் 1.30 நிமிடத்தில் 102 வேகமான சுழற்சிகளை செய்து சாதனை படைத்தார். இவரது இந்த  சாதனையை நோவா வோல்ட் ரெக்கார்ட் பதிவாளர் ராஜ்குமார் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார்.

சாதனை படைத்த மாணவன் ஹரிஷ் மற்றும் அவர் சாதனை படைக்க காரணமாக விளங்கிய யோகா ஆசிரியர்கள் எஸ்.காளத்தீஸ்வரன், ஜெ.அர்ச்சனா, எஸ்.வித்யா, வி.சங்கீதா ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு தற்போது தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பல பள்ளிகளில்  யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் அதனை கற்று மாவட்ட, மாநில ,தேசிய அளவில் சாதனை படைத்து வருகிறார்கள். யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு ஒரு தடை இல்லை என்றாலும் யோகா கற்றுக்கொள்வதற்கு சரியான வயது அதாவது பாலர் பருவம் தான். ஐந்து வயதில் வளையாததை ஐம்பதில் வளைக்க முடியாது என்ற முதுமொழிக்கு ஏற்ப ஐந்து வயதில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் வயதான காலத்தில் நோய் நொடியின்றி  இல்லாமல் வாழலாம் என்பது எதார்த்தமான உண்மையாகும்.

Tags:    

Similar News