தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!

கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-05-09 07:15 GMT

கும்மிடிப்பூண்டி கே. எல். கே. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ராமமூர்த்தி ஓய்வு நேற்று பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ராமமூர்த்தி. இவர் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி காஞ்சிபுரம் காட்டுப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஈகுவார் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி,கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,ஆத்து பக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேரி அரசு ஆண்கள் இங்கே பள்ளிகளில் பணிபுரிந்து கடைசியாக கும்மிடிப்பூண்டி கே எல் கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023 ஆம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

இதனை ஒட்டி இவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், பொன்னேரி முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் , கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே. எம். எஸ் .சிவகுமார், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை மாவட்ட செயலாளர் டி சி மகேந்திரன், அதிமுக நிர்வாகிகள் எல். சுகுமாரன், ரமேஷ் குமார், மு.க.சேகர், திமுக மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் டி ஜே எஸ் தமிழரசன், கும்மிடிப்பூண்டி முன்னாள் டிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ராமமூர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை மாலை அணிவித்து நினைவு பரிசை வழங்கினர்.

மேலும் நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் ராமமூர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமமூர்த்தி ஏற்புரை வழங்கும் போது பணிக்காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் உயர் அதிகாரிகள் சமூக ஆர்வலர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை சேதுபதி உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

Tags:    

Similar News