உடுமலையில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 200 கிலோ மாம்பழம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், ரசாயன கல் வைத்த பழுக்க வைக்கப்பட்ட 200 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-01 15:06 GMT

உடுமலை நகராட்சி வாரச்சந்தை பகுதியில்,  ரசாயன கல் வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலை நகராட்சி வாரச்சந்தை பகுதிகளில்,  ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுவதாக, நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உடுமலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தல்படி,  நகராட்சி நகர்நல அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், வாரச்சந்தை பகுதியில் ஆய்வு செய்தனர். மாம்பழம் விற்கப்படும் கடைகளில் ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

அவ்வகையில், கடையில் இருந்த 200 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  செயற்கையாக பழுக்க வைப்பதற்காக, ரசாயன கல் வைத்திருந்ததற்காக கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. உடுமலைப்பகுதியில் ரசாயன கல் வைத்து மாம்பழம் வைத்து விற்கப்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என , அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Tags:    

Similar News