அமராவதி பிரதானக் கால்வாயில் சீரமைப்புப் பணிகள்; கலெக்டர் ஆய்வு

Tirupur News- உடுமலை அருகே அமராவதி பிரதானக் கால்வாயில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

Update: 2024-02-14 02:31 GMT

Tirupur News- உடுமலை அருகே நடந்து வரும் அமராவதி பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் கிறிஸ்துராஜ்.

Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே அமராவதி பிரதானக் கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், அமராவதி பிரதானக் கால்வாய் மூலம் மட்டும் 25,250 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக பிப்ரவரி 1-ம் தேதி பிரதானக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. கால்வாயில் தண்ணீா் சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த 8-ம் தேதி உடுமலையை அடுத்த சாமராயபட்டி அருகே பிரதானக் கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால், அருகேயுள்ள நிலங்களுக்குள் தண்ணீா் புகுந்து பயிா்கள் சேதமடைந்தன. மேலும், வெள்ள நீா்ப்போக்கி எனப்படும் சுரங்க வழித்தடத்தில் ஏற்பட்ட உடைப்பால் கால்வாயின் வலது கரை சேதமடைந்தது. அதன்பின் பிரதானக் கால்வாயின் மதகு அடைக்கப்பட்டு தண்ணீா் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து அமராவதி பிரதானக் கால்வாய் சரகம் மைல் 7.5.440 முதல் மைல் 16.5.000 வரை உள்ள 7 சுரங்க வழிப் பாதைகள், 5 தலைப்பு மதகுகள், 18 நேரடி மதகுகள் உள்ளிட்ட குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைப்பு, கரை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில், கால்வாய் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் கிறிஸ்துராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்தாா்.

சீரமைப்புப் பணிகளை துரிதமாக முடித்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கோபி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News