வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
Tirupur News- வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
கடந்த காலங்களில் போல் இல்லாமல் இந்த முறை இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நகரமும் வெயிலில் அனல் தாக்கத்தால் மிகவும் தகிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கிறது.
குறிப்பாக, இந்திய அளவில் அதிக வெப்பம் உள்ள மாவட்டமாக ஈரோடு மாவட்டம் இந்த முறை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. அதன் அருகில் உள்ள மாவட்டமான திருப்பூர் மாவட்டத்திலும் வெயிலும் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது. பனியன் தொழிலாளர் நிறைந்துள்ள திருப்பூரில், இது போன்ற வெயிலின் தாக்கத்தால் பலரும் பல விதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக அம்மை நோய் தாக்கம், திருப்பூரில் பல்வேறு இடங்களில் மிக அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தை தணிக்கவும், பூமியின் சூட்டை குறைக்கவும் மழை பெய்தால் மட்டுமே மக்கள் தாக்குபிடிக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சில ஆன்மீக அமைப்புகள் சார்பில், மழை வேண்டி தொடர்ந்து வேள்விகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெயிலின் தாக்கத்தால், மனிதர்களே கடுமையான பாதிப்பில் சிக்கியுள்ள நிலையில், காடுகளின் வனவிலங்குகளின் நிலை மிகவும் அவலத்துக்குரியது. கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்குவதால் ஆறுகள் வறண்டு போகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து தாகத்தோடு தண்ணீரை தேடி மலை அடிவாரப்பகுதியை நோக்கி வந்து விடுகிறது.
கடந்த சில வாரமாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மரங்கள், செடிகள், புற்கள் உள்ளிட்டவை காய்ந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. அவை மலை அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுத்த வந்த வண்ணம் உள்ளன.