திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடிபட்டியலை இன்று ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டார்.

Update: 2022-08-29 08:37 GMT

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று வரைவு வாக்குச்சாவடி  பட்டியல் வெளியிடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்வு இன்று காலை  மாநகராட்சி அலுவலகத்தில் மைய அலுவலகத்தில் நடைபெற்றது.  இதனை ஆணையர் வைத்திநாதன்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.இந்நிகழ்வில் மேயர் மு. அன்பழகன், துணை மேயர் திவ்யா மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News