சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுநர்கள், வட்டார வள பயிற்றுநர்கள் கருத்தரங்கு

சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுநர்கள், வட்டார வள பயிற்றுநர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு திருச்சியில் நடைபெற்றது.

Update: 2024-06-07 12:28 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் (கோப்பு படம்)

சென்னை தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வள பயிற்றுநர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் சத்துணவுத் திட்டம் குறித்த ஒரு நாள் சமூக தணிக்கை கருத்தரங்கு 07.06.2024 இன்று திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் இணை இயக்குநர் த சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இயக்குநர் பொன்னையா கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் இயக்குநர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்  கலந்து கொண்டு சமூக தணிக்கை குறித்து அறிமுக உரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குநர் எஸ்.எஸ். குமார் தலைமைப் பொறியாளர் எஸ். சடையப்பன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். தேவநாதன், செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் சமூக நல இயக்கக இணை இயக்குனர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

இக்கருத்தரங்கில் மதுரை தானம் அறக்கட்டளையைச் சேர்ந்த எஸ். சிங்கராயர் மற்றும் முனைவர் மதன்குமார் வேலூர் நதி புனரமைப்பு  திட்டத்தின் இயக்குநர் சந்திரசேகரன் குப்பன் முதன்மை கணக்காயர் அலுவலக முதுநிலை தணிக்கை அலுவலர் (ஓய்வு) பி. ரவி அவர்களும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிருஷ்ணசமுத்திரம் கிராம ஊராட்சி தலைவர் எஸ்.ரம்யா, ரெட்டிமாங்குடி கிராம ஊராட்சி தலைவர் எம்.கே. தங்கவேல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மணிவண்ணன் சில கிராம ஊராட்சி வள பயிற்றுநர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு சமூக தணிக்கை குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் முடிவில் திருச்சிராப்பள்ளி சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுநர் அசோக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Tags:    

Similar News