ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.;
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் 9 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்வார்.
அங்கு அலங்காரம் அமுது செய்து சூரணாபிஷேகம் கண்டருள்வார் பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவில் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்த உற்சவத்தின் ஏழாம் நாள் அன்று நம்பெருமாள் உபய நாச்சியர்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வளம் வந்து இரவு 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 45 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு இரவு எட்டு முப்பது மணி முதல் இர30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளினார். இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.