திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு பாராட்டு

திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-05-26 13:45 GMT
திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டி , கௌரவித்தனர்.

2009 முதல் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று மக்கள் சக்தி இயக்க சார்பில் பாராட்டி , கெளரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி, பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறது.

இதனை தொடர்ந்து திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

பஞ்சப்பூா் பகுதியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க சகாய மரியநாதனின் உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.

17.05.24 அன்று அவரின் கல்லீரல் திருச்சி தனியாா் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை தனியாா் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும், இரு கண்கள் திருச்சியில் கண் பாா்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும், உடலின் தோல், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும் தானமாக பெறப்பட்டன.

இந்தநிலையில் உடலுறுப்பு தானம் செய்த அக்குடும்பத்தினரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , மக்கள் சக்தி இயக்க மாவட்டச் செயலாளர் ஆர். இளங்கோ, நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, வெ.ரா.சந்திரசேகர் உள்ளிட்ட

மக்கள் சத்தி இயக்கம் நண்பர்கள் இன்று 26.05.24 காலை கலந்து கொண்டு அந்த குடும்பத்தினரை பாராட்டி,கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

Tags:    

Similar News