சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாரதிய ஜனதா ஓபிசி அணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

Update: 2024-05-24 15:17 GMT

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஓ பி சி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் சமூக வலைத்தளத்தில் முக்குலத்தோர் சமூகத்தினையும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும் அவமானப்படுத்தும் விதமாகவும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் குறித்து கலவரத்தை தூண்டும் விதமாகவும் இழிவான கருத்துக்களை பேசி சவுக்கு சங்கர் தனது youtube சேனலில் வெளியிட்டுள்ளார்.

இது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சவுக்கு சங்கர் மீதும் சவுக்கு யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பின்னர் இது குறித்து சூர்யா சிவா  செய்தியாளர்களிடம் கூறுகையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் புகழை பாதுகாப்பது ஓ பி சி அணியின் கடமை என்பதால் சவுக்கு சங்கர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் நீண்ட நாள் சவுக்கு சங்கர் பயணித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் மரணத்தில் காரை ஓட்டி வந்த மல்லிகா நல்லுசாமி சவுக்கு சங்கரின் நண்பர் ஆவார் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பலவற்றை அவர்கள் மறைத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்

Tags:    

Similar News