திருச்சியில் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-24 14:29 GMT

இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், ஆயுதங்களை காண்பித்து பணம் நகை செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள்,  உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 23 4 2024 ஆம் தேதி கண்டோன்மெண்ட்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் அருகில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்( வயது 20 )என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரவீன் குமார் மீது தில்லை நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட ஐந்து வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள  நிலுவையில் இருப்பது தெரியவந்தது .

எனவே பிரவீன் குமாரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கன்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்படி பிரவீன் குமார் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்ட ஆணை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரவீன் குமாரிடம் இன்று சார்வு செய்யப்பட்டது திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுதத்தை காண்பித்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News