தூத்துக்குடியில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக கண் பார்வை தினத்தையொட்டி தூத்துக்குடியில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மனித சங்கிலி நடந்தது.

Update: 2021-10-21 12:44 GMT

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக கண் பார்வை தினம்  கடைப்பிக்கப்பட்டு வருகிறது. பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் உலக கண் பார்வை தினம் கொண்டாடப்படுகிறது.

80 சதவீதம் பார்வையிழப்பு தவிர்க்கக் கூடியவையே, தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு மற்றும் பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும் நோய்கள் குளுகோமா எனப்படும். கண் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு போன்றவற்றில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் இன்று கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

இதில் உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெபமணி, மருத்துவர்கள் குமரசாமி, பெரியநாயகி மற்றும் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கண் பார்வை வழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.

கண் பார்வை இழப்பைத் தடுப்பதே இந்த உலகப் பார்வை தினத்தின் நோக்கமாகும். உலக பார்வை தினம் 2021ன் கருத்து வாசகம்."உங்கள் கண்களை நேசியுங்கள்'' என்பதாகும்.

Tags:    

Similar News