விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடியில் வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடியில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதல் கல்வி கற்றுக் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2021-10-15 04:00 GMT

ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வியில் துவக்கமாக கருதப்படும் வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் இந்த தினத்தில், குழந்தைகளுக்கு முதல் கல்வி கற்றுக் கொடுப்பது வழக்கம். இதனை முன்னிட்டு தூத்துக்குடி எஸ்ஏபி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஞானதுரை தலைமையில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில்,  400க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து தட்டில் பரப்பி வைக்கப்பட்ட அரிசியில் கடவுள் வழிபாடு எழுத்து, தமிழ் எழுத்துகள் உள்ளிட்டவை குழந்தையின் கையை பிடித்து எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு முதல் எழுத்தான அ - வை ஆர்வமுடன் எழுதினர்.

Tags:    

Similar News