தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-04-12 07:40 GMT

இருசக்கர வாகனங்கள் திருடியதாக கைது செய்யப்பட்ட ராமர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டன. தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த ரமேஷ்கண்ணன் (45) என்பவர் கடந்த 08.04.2023 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தபோது அந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது.

அதேபோன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 10.04.2023 அன்று வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது மேற்படி இருசக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது.

மேலும், சாயர்புரம் செபத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் நித்தின் விக்னேஷ் (22) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 04.03.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது அந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அஜய்குமார் விஸ்வகர்மா (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 04.04.2023 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது அந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது.

காணாமல் போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீஸார் அடங்கிய தனிப்படை போலீசார் திருட்டு நிகழ்ந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோவில்பட்டி கூசாலிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்லதுரைபாண்டியன் மகன் ராமர் (31) என்பவர் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. உடனே, தனிப்படை போலீசார் ராமரை கைது செய்து அவரிடம் இருந்த திருடப்பட்ட மொத்தம் ஒரு லட்சத்து 80,000 ரூபாய் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி ராமர் மீது ஏற்கெனவே மத்தியபாகம் காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 10 வழக்குகள் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News