தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது

முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பெட்டகம் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2021-06-12 13:56 GMT

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சித்தமருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது

 நாடு முழுவதும் கொரானா வைரஸ் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பாக தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு என்பது அதிகளவில் காணப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அறிவித்துள்ளது இந்நிலையில் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு ஊழியர்கள் முன் களப்பணியாளர்கள் பொது மக்களுக்கும் கொரானா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி உத்தரவின்பேரில், மாநகராட்சிக்கு உட்பட்ட பிஅன்டி காலனியில், கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முன் களப்பணியாளர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் சித்த மருத்துவ பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சித்தா மருத்துவர் டாக்டர்.முத்துமாரி கலந்து கொண்டு கொரானா நோய் வராமல் தடுப்பதற்கு முன்களப்பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என எடுத்துரைத்தார்.


பின்னர், முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பெட்டகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News