ஸ்டெர்லைட் ஆலையில் இன்று 19.62 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று ஜூன் 10ம் தேதி மாலை 6.00 மணி நிலவரப்படி 19.62 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2021-06-10 16:15 GMT

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் நிரப்பும் பணியில்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று ஜூன் 10ம் தேதி மாலை 6.00 மணி நிலவரப்படி 19.62 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மேற்படி ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி 19.62 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு 5.12 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4.00 மெட்ரிக் டன் பெரக்கா இன்ஜினியரிங் ஓர்க்ஸ் நிறுவனத்திற்கும், 10.50 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News