ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-08 05:57 GMT

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகில் இதுவரை 542.92 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 265 சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 542.92 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும் கரோனா நோயாளகளின் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், கரூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #information #ஸ்டெர்லைட் #ஆலை #மெட்ரிக்டன் #ஆக்சிஜன் #உற்பத்தி #500metric #tons #oxygen #Sterlite #plant #sent #various #hospitals #covid #covid19 #coronatreatment

Tags:    

Similar News