கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி உத்தரவின்படி முன்களப் பணியாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

Update: 2021-06-11 12:34 GMT

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியின் நோய் தடுப்பு நடவடிக்கையாக முன்களப் பணியாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மாநகரப் பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அறிகுறியுள்ள பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கோவிட் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அப்பகுதி பொது மக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் விளக்கப்படுகிறது. அதில் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வாய்ப்புண்டு. நோய்த்தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பொதுமக்களும் அடிக்கடி கைகளை கழுவுதல் நல்லது.

கையுறைகளை அணிவதற்கு முன்பும் பயன்படுத்திய பின் அதை அகற்றும் போதும் கைகளை கழுவுதல் நல்லது. உணவு சமைப்பதற்கு முன்பு சமைத்து முடித்த பின்பும் தவறாமல் கைகளை கழுவ வேண்டும். ஒவ்வொரு முறை கை கழுவும் போதும் குறைந்தது 40 வினாடிகளுக்கு கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவுவதோடு கிருமி நாசினியும் பயன்படுத்த வேண்டும். கைகளை கழுவிய பின் துடைப்பதற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காகிதங்களை பயன்படுத்தலாம், இல்லையேல் துணியாலான துண்டுகளை பயன்படுத்தலாம் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் சுகாதாரம் எங்கும் நிலைக்கச் செய்யுங்கள் என பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News