வைகுண்டபதி பெருமாள் கோவில் ரூ.10 கோடியில் புதுப்பிக்கும் பணி : அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் புதுப்பிக்கும் பணிகளை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

Update: 2021-07-03 05:04 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர், இன்று தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சுமார் ரூ 10 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் பணிகளை, அவர்கள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பெருமாள் கோவிலில் ரூ.3 கோடி செலவில் கல் மண்டபம் அமைக்கும் பணி, ரூ.2 கோடி செலவில் கோவில் உள்சுற்றுச்சுவர், பஞ்சவர்ணம் தீட்டும் பணி, தரைதளம் புதுப்பித்தல் மற்றும் ரூ.5 கோடி செலவில் புது ராஜ கோபுரம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தனர்.

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் , உடனிருந்தனர்.

Tags:    

Similar News