கொரோனா தடுப்பூசி முகாம் : தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மில்லர்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் : மாநகராட்சி நகர்நல அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-12 18:25 GMT

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மில்லர்புரத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர்.வித்யா நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி உத்தரவின்படி, ஜூன் 12ஆம் தேதி இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் 33 இடங்கள் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு, தடுப்பூசி முகாம், கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாநகர நல அலுவலர் மருத்துவர் வித்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜசேகர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இம்முகாமில், கோவாக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 71 பேருக்கும், 45 மேற்பட்டவர்கள் 51 பேருக்கும், கோவிட் சீல்டு 18 வயது மேற்பட்டவர்கள் 33 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 55 பேருக்கும் என மொத்தம் 210 பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Tags:    

Similar News