அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் மின்தூக்கி பணி-கனிமொழி எம்பி ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் மின்தூக்கி பணியினை கனிமொழி எம்பி ஆய்வு செய்தார்

Update: 2021-06-06 15:47 GMT
கனிமொழி எம்பி -கீதாஜீவன் -மருத்துவமனையில் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு மின்தூக்கி அமைக்கப்பட்டு வரும் பணிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் இன்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை வார்டுக்கு மின்தூக்கி (லிப்ட்) வசதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் கனிமொழி எம்பி, பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா வார்டுக்குள் சென்று, சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை நடைபெறுகிறதா என்றும் அவர்களின் உடல்நலம் குறித்தும் நலம் விசாரித்தார். மேலும், கரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் மையத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டார். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ பணியாளர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News