தூத்துக்குடி மாநகராட்சி- புஷ்பா நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநகரின் புஷ்பா நகரில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-05-27 12:55 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநகரின் 60 வார்டுகளிலும் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி முகாம் தினம்தோறும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் மே 26ம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 57 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி உத்தரவின் பேரில் அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு, காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே 27ம் தேதியான இன்று மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட புஷ்பாநகரில் அப்பகுதி மக்கள் நல சங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தூத்துக்குடி மடத்தூர் ஆரம்ப சுகாதாரத்துறை அலுவலர் தெய்வத்தாய், செவிலியர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி அசோக், முத்துராஜ் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் அப்பகுதியை சார்ந்த 18 வயதிற்கும் மேற்ப்பட்டோர், முதியவர்கள், பொதுமக்கள் என பலர் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பொறியாளர் சுப்பிரமணியன், செந்தில், முருகன் மற்றும் ரமணி உள்ளிட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News