தூத்துக்குடி மாநகராட்சி -நாளை பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்-ஆணையாளர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் : ஆணையாளர் சரண்யா அறி அறிவிப்பு!

Update: 2021-06-10 17:54 GMT

தூத்துக்குடி மாநகராட்சி -நாளை பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை 11-06-2021 சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி அறிவிப்பு விடுத்துள்ளார்.

அதில் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருவிக நகர், சின்னமணிநகர் அங்கன்வாடி மையத்திலும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்திர நகர், சிதம்பர நகர் அம்மன் கோவில் தெரு பகுதியிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வள்ளிநாயகபுரம், மீனாட்சிபுரம் வாஞ்சிநாதன் கிளப் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம் முகாம்களில், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றால் 5பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,428 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 653 பேர் இன்று குணமடைந்தனர். இதுவரை 46,316 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 4783 போ் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.


Tags:    

Similar News