தூத்துக்குடி - போக்குவரத்து தொழிலாளர்களுக்கு- கொரோனா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி முகாம் நடைபெற்றது

Update: 2021-05-28 14:19 GMT

தூத்துக்குடி மாநகராட்சி-போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியினையும் தூத்துக்குடி மாநராட்சி ஆணையாளர் சரண்யா அறி உத்தரவின்படி மாநகராட்சி சார்பில் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி செலுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கையால் இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் உட்பட 1 லட்சத்து 19 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அரசு போக்குவரத்துக் கழக கிளைகளில் பணியாற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கேடிசி நகர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முகாமை அரசு போக்குவரத்து தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்,அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை ஊழியர்களும் அவர்களின் குடும்பதினரும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர். இன்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துறை பணியாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து தொழிற்சங்க தொ.மு.ச. பொருளாளர் முருகன் கூறுகையில், ஊழியர்கள் கொரோனா தொற்றை முழுவதுமாக ஒழிக்க அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News