தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 144 டாஸ்மாக் கடைகள் திறப்பு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 144 டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-06-13 18:07 GMT
தூத்துக்குடி டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியோடு மதுப்பிரியர்கள் வாங்கி செல்ல ஏதுவாக வட்டம் வரையப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 144 டாஸ்மாக் மதுபான கடைகளும் நாளை  (14.6.2021) திங்கட்கிழமை முதல் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும். அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தடுப்பு வேலிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகள் வழியாக வரிசையாக சென்று மதுபானங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதுபானம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோன்று 20 பேருக்கு மேல் அதிகமாக இருந்தால், உடனடியாக டோக்கன் வழங்கப்பட்டு, அதன் வரிசைப்படி மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட உள்ளது.

மேலும் கடைகளில் போதுமான மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் டாஸ்மாக் குடோன் காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது.

அங்கு இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கு மதுபானங்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது போதுமான அளவு மதுபானங்கள் கையிருப்பு உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News