தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி ஆய்வு…

திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-11-28 17:32 GMT

தூத்துக்குடியில் டிஐஜி பிரவேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அந்த சரகத்திற்குள்பட்ட துணைத் தலைவர் (டிஐஜி) ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள துப்பறியும் நாய்படை பிரிவு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆய்வு செய்தார்.

மேலும், காவல் துறை அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் ஆய்வாளர் தேவி, உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்ற டிஐஜி பிரவேஷ் குமார் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டக் காவல் துறைக்கு தேவையான வசதிகள் குறித்தும், கட்டிடங்கள் குறித்தும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் டிஐஜி பிரவேஷ் குமார் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News